தென்காசி : தென்காசி மாவட்டம், கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குலசேகரன்கோட்டை என்ற பகுதியை சேர்ந்த முத்துராஜ் என்ற நபர் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் அவரது வீட்டின் அருகில் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்கு வந்த சார்பு ஆய்வாளர் திரு. ராமச்சந்திரன், அவர்கள் சோதனை செய்ததில், அங்கு அரசால் தடை செய்யப்பட்ட 79,200 ரூபாய் மதிப்பிலான 218 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது, மேலும் புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த குலசேகரன்கோட்டை பகுதியை சேர்ந்த மாடசாமி என்பவரின் மகன் முத்துராஜ் (31), என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார்.