செங்கல்பட்டு: செங்கல்பட்டில் உள்ள யூனிக் டேலண்ட் ஸ்போர்ட்ஸ் அகாடமி, சார்பில் போதை விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி செங்கல்பட்டு பரனூரில் உள்ள மகேந்திரா வேர்ல்ட் சிட்டி, ஸ்பெஷல் எக்கனாமிக் ஜோனில் நடைபெற்றது. இதில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்களும் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு போதை ஒழிப்புக்கு எதிராக ஓடினர். மேலும் இப்போட்டியின் இறுதியில் கலைத்தமிழ் நாட்டியாலயா மற்றும் ராக் அகாடமி சார்பாக மாணவர்களின் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக டாக்டர். நந்தகுமார், எம்.டி, எஸ்.ஆர்.எம் காலேஜ், ப்ரொபசர், மற்றும் டாக்டர். கிருத்திகா நந்தகுமார். நாகராஜன், தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் மேன் அசோசியேஷன் செயலாளர், துரைராஜ், மாநில கால்பந்து நடுவர் ஆகியோர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளும் பொதுமக்களுக்கும் பரிசுகளை வழங்கினர். மேலும் இப்போட்டிக்கு C.K.ராஜேந்திரன் அவர்கள், தலைமை வகித்தனர். ஆர். திலக் தேவராஜ், செயலாளர் மற்றும் T. சரண்யா பொருளாளர், யூனிட் ஸ்போர்ட்ஸ் அகாடமி, இவர்கள் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 500க்கு மேற்பட்டபள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்