திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், தலைமையில் ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி, அலுவலகம் முதல் தாராபுரம் ரோட்டில் உள்ள PNK மஹால் வரை இரண்டு கிலோ மீட்டர் தூரம் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணியை எஸ்.பி.பாஸ்கரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியில் ஒட்டன்சத்திரம் பகுதி அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி நாட்டு நல பணி திட்டம் மாணவர்கள், காவல் அதிகாரிகள், மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா