மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச்சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, சட்ட விரோத மது கடத்தல் மற்றும் விற்பனை போன்ற குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்கள். அந்த வகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் தடைசெய்யப்பட்ட கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் மீது சுமார் 753 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மேற்படி வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 1922.784 கிலோ கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய சுமார் 231 இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் கஞ்சா விற்பனை தொடர்பான சுமார் 542 வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலமாக தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளது.
அதே போல், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் தடைசெய்யப்பட்ட குட்கா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் மீது சுமார் 1105 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, மேற்படி வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 6079.433 கிலோ கிராம் குட்கா மற்றும் குட்கா விற்பனைக்கு பயன்படுத்திய சுமார் 31 இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் குட்கா விற்பனை தொடர்பான சுமார் 755 வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலமாக தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள 187 பள்ளிகள், 30 கல்லூரிகள் மற்றும் 38 தொழிற்கல்வி பயிற்சிக் நிலையங்களில் காவல்துறை சார்பாக “Anti Drug Club” அமைக்கப்பட்டு, ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரிக்கும் தலா ஒரு காவலர் நியமிக்கப்பட்டு, அவர்கள் மூலமாக மாணவர்களிடையே போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரப்படுகிறது. மேலும், மாணவர்களுக்குள் குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் மூலமாக போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான தகவல்கள் பெறப்பட்டு, மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்பாட்டை தவிர்க்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்