தூத்துக்குடி: போதையில்லா தமிழ்நாடு” என்பதை உருவாக்கும் பொருட்டு (11.08.2025) மாநிலம் முழுவதும் “வெகுஜன போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி நாள்” (Mass Anti-drug Pledge Day) அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் உத்தரவின்படி மாவட்ட காவல் அமைச்சுப் பணி நிர்வாக அதிகாரி திரு. ராமசுப்பிரமணிய பெருமாள் அவர்கள் முன்னிலையில் காவல்துறையினர் மற்றும் காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் ஆகியோரால் கீழ்கண்டவாறு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன், நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன். போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணைநிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்.” என்று உறுதி மொழி ஏற்கப்பட்டது.