கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகர காவல் துறையினர் ஓசூர் சீத்தாராம்மேடு அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது லாரியில் ரகசிய அறை அமைத்து அதில் 225 கிலோ போதைப்பொருள்கள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. லாரியில் ரகசிய அறை அமைத்து கடத்திச் சென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த தூத்துக்குடி கிழக்குத் தெருவைச் சேர்ந்த டிரைவர் சொர்ணலிங்கம் (30). போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த 225 கிலோ போதைப்பொருள்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்