அரியலூர்: அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வகணபதி 22. இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளி வகுப்பு மாணவி ஒருவரை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து செல்வகணபதியை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த செல்வகணபதிக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.