திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2017 –ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம், சரக்கோட்டுவிளையை சேர்ந்த வினித் 25. என்பவர் வீரவநல்லூர் பகுதியில் உள்ள சிறுமியிடம் தவறாக நடந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள் வீரவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு குற்றவாளி வினித் மீது வழக்கு பதிவு செய்து எதிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இவ்வழக்கு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி அவர்கள் போக்சோ வழக்கின் குற்றவாளியான வினித் என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த வீரவநல்லூர் காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன் இ.கா.ப., அவர்கள் வெகுவாக பாராட்டினார்.