காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய காஞ்சிபுரம் அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முஜீபூர் ரகுமான் 24. என்பவர் கடந்த 14.10.2014 அன்று 9 வயது சிறுமியை பாலியல் வனபுணர்ச்சி செய்தது சம்பந்தமாக அப்போதைய சிவகாஞ்சி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.S.பிரபாகர் அவர்கள் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை கைது செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். பின்னர் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வழக்கை மாற்றம் செய்யப்பட்டு, வழக்கின் நீதிமன்ற விசாரணை செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
மேற்படி வழக்கில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர், அவர்களின் உத்தரவின்பேரில், காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.அஞ்சாலட்சுமி நீதிமன்ற காவலர் திருமதி.லதா மற்றும் செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர் திருமதி.N.புவனேஷ்வரி, M.L., ஆகியோர் இவ்வழக்கில் தனிக்கவனம் செலுத்தினார்கள்.
இந்நிலையில் மேற்படி வழக்கின் குற்றவாளி முஜீபூர் ரகுமானுக்கு செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருமதி.R.K.P.தமிழரசி M.L., அவர்கள் மேற்படி குற்றவாளி என உறுதிசெய்து 22 வருடம் ஒரு மாதம் சிறை தண்டனை, ரூபாய் 15,000 அபராதம் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு லட்சம் நிவாரணத தொகை வழங்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும், இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டணை பெற்றுதர சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர், நீதிமன்ற விசாரணை பணிகளை மேற்கொண்ட காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற காவலரை காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்