கன்னியாகுமரி : கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் திருவட்டார், குமரன் குடி பகுதியை சேர்ந்த ஜஸ்டின் என்பவரது மகன் சரத் (19). என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. அழகுமீனா IAS அவர்கள் மேற்படி குற்றவாளியை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்கள். அவ்வுதரவின்படி குற்றவாளி சரத் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுகின்ற நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
















