திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மானூர், தெற்குப்பட்டியை சேர்ந்த ராமர் மகன் முருகன் (55). என்பவர் போக்சோ வழக்கு குற்றவாளி. இவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஊரக அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், மாரியம்மாள் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு விடுத்த வேண்டுகோள் படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.வி. பிரசண்ண குமார் இ.கா.ப., பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், (08.01.2026) அன்று குண்டர் சட்டத்தில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















