திண்டுக்கல் : (28.10.2022), திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020- ம் ஆண்டு விளாம்பட்டி, காமாட்சிபுரம், வடக்கு தெருவைச் சேர்ந்த சிங்கராஜா (32), என்பவர் (14),வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ய முற்பட்டதாக கொடுக்கப்பட்ட புகாரை தொடர்ந்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிங்கராஜா என்பவரை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்களின் அறிவுறுத்தலின்படி நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.பேபி அவர்கள் நீதிமன்ற தலைமைக் காவலர் திருமதி.முத்துப்பாண்டி அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் திருமதி.ஜோதி, அவர்களின் சீரிய முயற்சியால் (28.10.2022)-ம் தேதி திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி சிங்கராஜா என்பவருக்கு 4 வருடம் 3 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,500/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.