திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி காவல் நிலைய சரகத்தில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் எதிரிகளான நாங்குநேரி வட்டம், மறுகால்குறிச்சி, மாடன் கோவில் தெருவைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவரின் மகன் சங்கர் என்ற குட்டசங்கர் 24, பாளையம்கோட்டை வட்டம், ரெட்டியார்பட்டி, எஸ்.ஆர்.குளம் பகுதியை சேர்ந்த ராமசுப்பு என்பவரின் மகன் ராமேஷ்வரன் 28 ஆகிய இருவரும் அடிதடி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன் இ.கா.ப., அவர்கள் கவனத்திற்கு வந்ததால் குற்றவாளிகளை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நாங்குநேரி காவல் ஆய்வாளர் திரு. காளியப்பன் அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி குற்றவாளிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், 08.02.2022 இன்று குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.