திண்டுக்கல்: திண்டுக்கல், நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு (15). வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து அதனை மொபைல் போனில் பதிவு செய்து பணம் கேட்டு மிரட்டிய ஆண்டிஅம்பலம் (40). அவரது மனைவி சீரின்ஜெனத் (40). ஆகிய 2 பேரையும் நத்தம் போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் நீதிபதி அவர்கள், ஆண்டிஅம்பலத்திற்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.1,10,000/- அபராதமும், அவரது மனைவி சீரின்ஜனத்திற்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.60,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா