திண்டுக்கல்: திண்டுக்கல், சத்திரப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2021-ம் ஆண்டு கடத்தி சென்று திருமணம் செய்த வழக்கில் சத்திரப்பட்டி போலீசார் குஜிலியம்பாறை, லந்தகோட்டையை சேர்ந்த தேவிகா(45). மகன்கள் அஜித்(22). மஜீத்(19). ஆகிய 3 பேரை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் சத்திரப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் கவிதா தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோரின் சீரிய முயற்சியால் நீதிபதி வேல்முருகன் அவர்கள், அஜித்துக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 5 ஆண்டுகள் சிறை, ரூ.1,55,000 அபராதம் தேவிகாவிற்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 2 ஆண்டுகள் சிறை, ரூ.1,50,000 அபராதம், மஜித்திற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா