திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் மானூர் துலுக்கர் பட்டியை சேர்ந்த சோமசுந்தரம் (67). என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு 3 வயது சிறுவனிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து மானூர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, சோமசுந்தரத்தை கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கின் தீர்ப்பு (21.112025) அன்று வழங்கப்பட்டது. அதில் குற்றவாளி சோமசுந்தரத்திற்கு ஏழரை ஆண்டு காலம் சிறையும் ரூபாய் 5000 அபராதமும் விதிக்கப்பட்டது.
இவ்வழக்கில் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆற்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த தாலுகா உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ரகுபதி ராஜா, மானூர் காவல் ஆய்வாளர், சந்திரசேகரன், காவல் ஆய்வாளர், சபாபதி (தற்போது தாழையூத்து காவல் நிலையம்) மற்றும் மானூர் காவல்துறையினரையும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., வெகுவாக பாராட்டினார். மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் நிகழாண்டில் இதுவரை 24 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 25 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க வகையில் ஒரு குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும். ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளி இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனையும், நான்கு நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட காவல்துறையானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் தனி கவனம் செலுத்தி அவர்களுக்கெதிராக குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்














