திருநெல்வேலி : நாகர்கோயில் தெற்கு சூரங்குடி அருகே உள்ள புத்தன் முகிலன் விளையை சேர்ந்த நடராஜன் (62). என்பவர் அதே பகுதியை சேர்ந்த ஐந்து வயது சிறுமிக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து ஈத்தா மொழி காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றவாளி நடராஜனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இவ் வழக்கில் திறமையாக செயல்பட்டு சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்து குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்த காவல் ஆய்வாளர், இந்திராவுக்கு,
(தற்பொழுது திருநெல்வேலி மாநகர மதுவிலக்கு பிரிவு) கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்