திருநெல்வேலி : திருநெல்வேலி மேலப்பாளையம் நேதாஜி சாலையைச் சேர்ந்தவர் முஹம்மது அலி (59). தொழிலாளியான இவர், மேலப்பாளையம் அருகேயுள்ள பீடி காலனி பகுதியைச் சேர்ந்த (8). வயது சிறுமிக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பாளையங்கோட்டை அனைத்து மகளிா் காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து முஹம்மது அலியை கைது செய்தனர். இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்ட முஹம்மது அலிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து (10.10.2025) அன்று தீர்ப்பளித்தது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்