திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகேயுள்ள ஓடைமறிச்சான் செக்கடி நடுத்தெருவைச் சேர்ந்தவர் முத்துகுட்டி(65). இவர் 2018 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக முக்கூடல் காவல்துறையினரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி சுரேஷ்குமார் விசாரித்து முத்துகுட்டிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.3 லட்சம் நிவாரண தொகை வழங்க உத்தரவிட்டும் தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக்கொடுத்த சேரன்மகாதேவி காவல் துணைக் கண்காணிப்பாளர் சத்யராஜ், காவல் ஆய்வாளர், சங்கரேஸ்வரி (தற்போது திருநெல்வேலி மாநகரம்) உள்ளிட்ட காவல்துறையினர், அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்