திருச்சி : திருச்சி மாவட்டம், புலிவலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரியும் முகமது அலி என்பவர் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லைகளில் ஈடுபடுவதாக திருச்சி மாவட்ட குழந்தைகள் நல உதவி மைய மேற்பார்வையாளர் அளித்த புகாரின் பேரில் முகமது அலி மீது ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.