திருநெல்வேலி: போக்சோ வழக்கில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை பெற்றுத் தந்த காவல் அதிகாரிகளை மாநகர காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டினார். பாளையம்கோட்டை சரகத்தை சேர்ந்த காவல் உதவி ஆணையர் திரு. சுரேஷ், காவல் ஆய்வாளர் திருமதி நாககுமாரி, காவல் உதவி ஆய்வாளர் திருமதி வள்ளியம்மாள், காவல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திருமதி ரேணுகா, திருமதி ஜெயந்தி, திருமதி சிலுவை ராணி மற்றும் தலைமை காவலர் திருமதி மெர்லின் குளோரி ஆகியோருக்கு சிறப்பாக பணியாற்றியதற்காக நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. காவல் துறையின் சிறப்பான விசாரணை மற்றும் சட்டநடவடிக்கையின் மூலம் குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை கிடைக்கச் செய்ததற்காக அவர்களை மாநகர காவல் ஆணையர் பாராட்டினார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா
















