திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த பழனி அடிவாரம் பகுதியைச் சேர்ந்த காந்திராஜன் (23). என்பவரை பழனி அடிவாரம் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப், இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.உதயக்குமார் அவர்கள், நீதிமன்ற முதல்நிலைக் காவலர் திருமதி.கோமதி அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் திருமதி.ஜோதி அவர்களின் சீரிய முயற்சியால் இன்று (18.12.2023)-ம் தேதி திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி காந்திராஜன் என்பவருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 3,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா