திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு (12) வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திண்டுக்கல் பாரதிபுரத்தைச் சேர்ந்த லிங்க மூர்த்தி(48). கண்ணன்(50). மற்றும் முகமது ரபிக்(60). ஆகிய மூன்று நபர்களையும் போக்சோ வழக்கில் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.அமுதா அவர்கள், நீதிமன்ற தலைமைக் காவலர் திருமதி.அபிராமி அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் திருமதி. மைதிலி அவர்களின் சீரிய முயற்சியால் இன்று |(11.12.2023)-ம் தேதி திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி அவர்கள் மூன்று குற்றவாளிகளில் முகமது ரஃபிக் இறந்த நிலையில் முதல் மற்றும் இரண்டாம் குற்றவாளிகளான லிங்கமூர்த்தி மற்றும் கண்ணன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும் மற்றும் தலா ரூ.2,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா