திண்டுக்கல் : திண்டுக்கல் வடமதுரை அருகே, உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த (15). வயதான 10-ம் வகுப்பு மாணவிக்கு திடீரென உடலில் மாற்றங்கள் ஏற்பட்டது. அவரது பெற்றோர், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மாணவியை சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்தபோது, மாணவி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதற்கிடையே மாணவிக்கு குழந்தை பிறந்து சில மணிநேரத்திேலயே இறந்து விட்டது. இது குறித்து வடமதுரை போலீசார் மற்றும் சமூக நலத்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் வடமதுரை அருகே, உள்ள கோப்பம்பட்டியை சேர்ந்த தொழிலாளி உதயராயர் (24). என்பவர், மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியது தெரிய வந்தது. இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உதயராயரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா