திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் அம்மைய நாயக்கனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018-ஆம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று திருமணம் செய்து பாலியல் வன்புணர்வு செய்த சின்னாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (23). என்பவரை அம்மைய நாயக்கனூர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.பாஸ்கரன் அவர்களின், அறிவுறுத்தலின்படி அம்மையநாயக்கனூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.குமரேசன், நீதிமன்ற தலைமைக் காவலர்.செல்வகனி அவர்கள், மற்றும் அரசு வழக்கறிஞர் .ஜோதி சீரிய முயற்சியால் அன்று (09.10.2023)-ம் தேதி திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி மகேந்திரன் என்பவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 3,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா