திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு (17) சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்ற மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (27) என்பவரை போக்சோ வழக்கில் பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல் கடந்த 2020 ஆம் ஆண்டு 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற கீரனூர் பகுதியைச் சேர்ந்த காஜா மைதீன் என்ற அஜ்மீர் காஜா மைதீன் (20) என்பவரை பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்
மேற்கண்ட இரண்டு வழக்குகளும் திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கவிதா அவர்கள் நீதிமன்ற தலைமை காவலர் திருமதி.கற்பகவள்ளி அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் திருமதி.ஜோதி அவர்களின் சீரிய முயற்சியால் இன்று 09.02.2023-ம் தேதி திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி மணிகண்டன் என்பவருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.16,000/- அபராதமும் மற்றும் காஜாமைதீன் என்ற அஜ்மீர் காஜா மைதீன் என்பவருக்கு 20 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா