திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் திண்டுக்கல் சோலை கால், நெட்டு தெருவை சேர்ந்த சிவச்சந்திரன் 43. என்பவரை போக்சோ வழக்கில் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.முத்துலட்சுமி அவர்கள் நீதிமன்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் திருமதி.ஜோதி அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் திருமதி.ஜோதி அவர்களின் சீரிய முயற்சியால் 30.01.2023-ம் தேதி அன்று திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி சிவச்சந்திரனுக்கு 07 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.11,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.