திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் பூம்பாறை பகுதியைச் சேர்ந்த ரவி (எ) ரவிச்சந்திரன் (27) என்பவரை போக்சோ வழக்கில் கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.சுமதி அவர்கள், நீதிமன்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் திருமதி.பாப்பாத்தி மணி அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் திருமதி. ஜோதி அவர்களின் சீரிய முயற்சியால்
(20.01.2023) திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி ரவி (எ) ரவிச்சந்திரனுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் ரூ.11,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா