திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் வேடசந்தூர் வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் 43. என்பவரை போக்சோ வழக்கில் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.ஜெயராணி அவர்கள், நீதிமன்ற முதல் நிலை காவலர் திருமதி.மதுபாலா அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் திருமதி.ஜோதி அவர்களின் சீரிய முயற்சியால் 19.01.2023 ம்தேதி அன்று திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி வெங்கடேசன் என்பவருக்கு 10 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.