திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடைக்கானல் கூக்கால் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன்(54). என்பவரை போக்சோ வழக்கில் கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப்., இ.கா.ப., அவரது அறிவுறுத்தலின்படி கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்.செந்தாமரை, நீதிமன்ற சிறப்பு சார்பு ஆய்வாளர்.பாப்பாத்தி மணி மற்றும் அரசு வழக்கறிஞர்.மைதிலி அவரது சீரிய முயற்சியால் திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி கிருஷ்ணன் என்பவருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.3500/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.