திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2019 ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்வு செய்ததாக தவம் (எ) தவசெல்வம் என்பவரை நத்தம் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு விரைவு மகிளா நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் நத்தம் காவல் துறையினர் மற்றும் அரசு வழக்கறிஞர் ஜோதி ஆகியோரின் புதிய முயற்சியால் இன்று மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள், தவசெல்வத்திற்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா