திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2021 ஆம் ஆண்டு கடத்தி சென்று பாலியல் சீண்டல் செய்ததாக குமரேசன்(25). என்பவரை, தாடிக்கொம்பு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு, திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்ததது. திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அறிவுறுத்தலின்படி, தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் ஜோதி ஆகியோரின் சீரிய முயற்சியால் இன்று மகிளா நீதிமன்ற நீதிபதி, குற்றவாளி குமரேசனுக்கு, 23 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி