திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018-ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சிறுமியின் உறவினரான ஒட்டன்சத்திரம் ஜோகிபட்டியைச் சேர்ந்த பொம்மனசாமி (55). என்பவரை வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். பாஸ்கரன் அவர்களின், அறிவுறுத்தலின்படி வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்.ஜெயராணி அவர்கள், நீதிமன்ற தலைமைக் காவலர். ஆரோக்கிய செல்வி மற்றும் உதவி அரசு வழக்கறிஞர். அமரஜோதி அவர்களின் சீரிய முயற்சியால் (21.09.2023) -ம் தேதி திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி பொம்மனசாமி என்பவருக்கு 07 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.25,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா