திண்டுக்கல்: திண்டுக்கல் ஊரக அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024-ஆம் ஆண்டு (13). வயது சிறுமியை மிரட்டி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சிறுமலை அருகே தென்மலை பகுதியைச் சேர்ந்த லட்சுமணன்(22). என்பவரை திண்டுக்கல் ஊரக அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப், இ.கா.ப அவரது அறிவுறுத்தலின் படி திண்டுக்கல் ஊரக அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்.முருகேஸ்வரி அவர்கள், நீதிமன்ற தலைமை காவலர்.விஜயலட்சுமி அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர்.மைதிலி அவரது சீரிய முயற்சியால் திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி லட்சுமணன் என்பவருக்கு 08 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.55,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் இந்த ஆண்டு இதுவரை 12 போக்சோ வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா