திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து பாலியல் வன்புணர்வு செய்த வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியை சேர்ந்த மதன்குமார் (22). என்பவரை போக்சோ வழக்கில் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப்., இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.வசந்தா அவர்கள், நீதிமன்ற தலைமைக் காவலர் திருமதி.ஆரோக்கிய செல்வி அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் திருமதி.மைதிலி அவர்களின் சீரிய முயற்சியால் இன்று (14.05.2024)-ம் தேதி திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி மதன்குமார் என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள். மேலும் இந்த ஆண்டு (2024) தொடக்கம் முதல் இதுவரை 22 போக்சோ வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகப்படியான தண்டனைகள் பெற்றுத் தரப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா