தென்காசி : தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கின் குற்றவாளியான திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை தாலுகா, அழகப்பபுரம் தெற்கு தெருவை சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன் இசக்கிமுத்து @ இரணியன்(49). என்பவரை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ்குமார் B.E., M.B.A., அவர்கள் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில் மேற்படி நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.