திருச்சி: திருவெறும்பூர் பகுதியில் பள்ளி மாணவிக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்தது தொடர்பாக ரமேஷ் என்பவர் மீது திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்ற காவல் உட்படுத்தியிருந்த நிலையில் குற்றசெயலில் ஈடுபட்ட ரமேஷ் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 22,000/- அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.