இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் (8). வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், அச்சிறுமியின் தந்தை ரமேஷ் என்பவருக்கு இராமநாதபுரம் விரைவு மகிளா நீதிமன்றம் ஆயுள்தண்டனை மற்றும் ரூபாய் 5000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது. 2025-ம் ஆண்டில் 7 போக்சோ வழக்குகளில் 7 குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மிக விரைவில் தண்டனை பெற்றுத் தரப்படும் என இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.