திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி காவல் சரகம் ராகலாபுரம் பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்த ராகலாபுரம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (23). என்பவரை சாணார்பட்டி காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி நத்தம் சரக காவல் நிலைய ஆய்வாளர். தங்கமுனியசாமி, நீதிமன்ற தலைமைக் காவலர்.தங்கசெல்வி மற்றும் அரசு வழக்கறிஞர்.ஜோதி அவர்களின், சீரிய முயற்சியால் (14.9.2023) அன்று திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி குற்றவாளி சந்தோஷ் என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 1,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா