திண்டுக்கல் : திண்டுக்கலில் போக்சோ வழக்கில், ஈடுபட்ட நபருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டணையானது, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கையால் வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா காவல்சரகம், பாலசமுத்திரத்தை சேர்ந்த தங்கபாண்டி (28) . இவர், பக்கத்து தெருவில் வசிக்கும் சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று திருமணம் செய்து பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக பழனி தாலுகா காவல்நிலையத்தில் கடத்தல் மற்றும் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். இவ்வழக்கானது, திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில், தங்கபாண்டி என்பவருக்கு, 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் மற்றும் ரூ.5,000/- அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி