திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த (03.12.2020) -ஆம் தேதி சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த செல்வம் (23), என்பவரை விளாம்பட்டி காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின், அறிவுறுத்தலின்படி விளாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.ஷர்மிளா அவர்கள், நீதிமன்ற தலைமை காவலர் திரு.பாபு அவர்கள், மற்றும் அரசு வழக்கறிஞர் திருமதி.ஜோதி அவர்களின் சீரிய முயற்சியால் (01.08.2023) திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி செல்வத்திற்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா