திண்டுக்கல்: திண்டுக்கல் வத்தலகுண்டு பகுதியில் 2022ஆம் ஆண்டு சிறுமியை ஏமாற்றி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், காமாட்சிபுரம் பள்ளபட்டியைச் சேர்ந்த முத்துசாமி (எ) அருண்குமார் (26) கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை, மேலும் 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இத்தீர்ப்பை பெற காவல்துறை மற்றும் அரசு வழக்கறிஞர் இணைந்து சிறப்பான நடவடிக்கை மேற்கொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















