செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த அம்மணம்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள கொள்ளமேடு பகுதியில் வாசிக்கும் இருளர் சமுதாய மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்கொடுமை சட்டம், அடிப்படை உரிமையியல் சட்டம் மற்றும் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு அந்தப் பகுதியில் வாழும் மக்களுக்கு சட்டம் பற்றிய விழிப்புணர்வு எடுத்துரைக்கப்பட்டது. இந்த பகுதியில் வாசிக்கும் மக்கள் பலர் கலந்து கொண்டனர் மேலும் இந்த நிகழ்வானது மாவட்ட துணை தலைவர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் பாபு முன்னிலை வகித்தார். வட்டத் தலைவர் தீனதயாளன் அனைவரையும் வரவேற்று பேசினார் பின்னர் வட்டசெயலாளர் முரளி நன்றி
உரை கூறினார். வட்ட துணை தலைவர் கலைச்செல்வன்
மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்
















