திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், IPS., அவர்கள், பள்ளி,கல்லூரி மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட காவல் துறையினருக்கு அறிவுறுத்தியிருந்தார்.
இதன் படி வள்ளியூர் உட்கோட்ட காவல்துறையினர் தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும்,
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்க 181, 1098 இலவச உதவி எண்களை அழைக்கலாம் என விழிப்புணர்வை ஏற்படுத்தியும், காவலன் SOS பயன்கள் குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.