திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே கங்கனாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (42). ஊராட்சி குடிநீர் திட்டப் பணியாளரான இவருக்கு, மனைவி, 2 மகள்கள் உள்ளனர். இதில், மூத்த மகளிடம் ராதாகிருஷ்ணன் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின்பேரில், பத்தமடை அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது சிறையில் அடைத்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்