திருநெல்வேலி : திருநெல்வேலி பேட்டையை சேர்ந்த (15). வயது சிறுமி பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த ஆறாம் தேதி காணாமல் போனதயடுத்து சிறுமியின் பெற்றோர்கள் பேட்டை காவல் நிலையத்தில் காணாமல் போனதாக புகார் அளித்தனர். பேட்டை காவல் ஆய்வாளர், ஜூடி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த பொழுது பேட்டை செக்கடி பகுதியை சேர்ந்த அர்ஜுன் மகன் வெங்கடேஷ் ராஜா (24). என்பவர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றது தெரிய வந்தது. சிறுமி மைனர் என்பதால் இதைப்பற்றி டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தவுடன் டவுன் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், அந்தோணி ஜெகதா தீவிர விசாரணை செய்து(07.10.2024) ஒரே நாளில் அந்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்