திருச்சி: திருச்சிவையம்பட்டி அருகே கருங்குளத்தை சேர்ந்தவர் சவரிமுத்து.இவருடைய மகன் ஆண்டனி பிரிட்டோ 20.இவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த சிறுமியுடன் இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளார்.
பின்னர் சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.பாஸ்டின் தினகரன்,சப்-இன்ஸ்பெக்டர் திரு. வேலுச்சாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஆண்டனி பிரிட்டோவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
திருச்சியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. நிஷாந்த்