திண்டுக்கல் : திண்டுக்கல் திருமலைசாமிபுரத்தைச் சேர்ந்த பாண்டி (35), என்பவர் தனது பக்கத்து கிராமத்தை சேர்ந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்ததாக திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில், மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி சரண் அவர்கள் குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.20,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா