திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், இடிந்தகரை, வடக்கு தெருவை சேர்ந்த ஜவஹர் (46). என்பவர் அப்பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், கெளரி மனோகரி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ஜவஹரை போக்சோ சட்டத்தின் கீழ் (25.09.2024) அன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்