திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சிவந்தியாபுரம், மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சரத்பாபு (24). என்பவர் அப்பகுதியை சேர்ந்த சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், கெளரி மனோகரி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சரத்பாபுவை (07.09.24) அன்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்